கீர்த்தனைகள்

பாடல் -9

  தேவ தேவனே, எகோவா,

வா, என் ஜீவனே.

காவலர்க் குபதேசனே, - கனபாவிகட்   கதிநேசனே - உயர்

கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ   ராஜகிறிஸ்துவாகிய - தேவ


1 அந்த மேனியே, - கனம் பெரும்    - அனந்த ஞானியே,  

விந்தை மானியே, - சுதந்தரம்    - மிகுந்த தானியே,    

தந்தையர் தர, வந்தவா, - பசு    

மந்தை யூடு பிறந்தவா, - கதி    

தந்தவா, சொல் உவந்தவா, - மெய்    

சிறந்தவா, விண்ணெழுந்தவா,   திவ்ய - தேவ 


2 சத்திய வாசனே, - அருள்மிகும்    - தவிது மைந்தனே,  

நித்திய நேசனே, - அடியவர் -     நினையும் ஈசனே,    

பத்தருக்குப காரனே, - வளர்    

பெத்தலைக் கதிகாரனே, - கன    

பாரனே, அதி தீரனே, - நல்    

உதாரனே, பெல வீரனே,   ஜெய - தேவ


3 வான சீலனே, - மனு உரு -    வான கோலனே,

ஞான பாலனே, - அதிசய -    நன்மை நூலனே,    

பானுவே மனுவேலனே, - இம்    

மானுவேல் அனுகூலனே, - கன    

பத்தியே தரு துத்தியமே, - நெடு    

நித்தியமாய் வளர் வஸ்துவே   ஒரு - தேவ