கீர்த்தனைகள்

பாடல் -3

3.ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ

1 ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ!
வாகு தங்கு குருநாதா,நமோ நமோ!
ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ - அருரூபா,
மாகமண்டல விலாசா நமோ நமோ!
மேகபந்தியி னுலாசா, நமோ நமோ!
வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, - மனுவேலா,
நாகவிம்பம் உயர் கோலா,நமோ நமோ!
காகமும் பணிசெய் சீலா,நமோ நமோ!
நாடும் அன்பர் அனுகூலா,நமோ நமோ, - நரதேவா,
ஏக மந்த்ரமுறு பூமா,நமோ நமோ!
யூக தந்த்ரவதி சீமா,நமோ நமோ!
ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ, - இறையோனே.

2 அறிவி னுருவாகிய மூலா,நமோ நமோ!
மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ!
அதிசய பராபர சீலா, நமோ நமோ, - அருளாளா,
பொறிவினை யுறாத சரீரா,நமோ நமோ!
குறையணுவிலாத குமாரா,நமோ நமோ!
புவன முழுதாள் அதிகாரா, நமோ நமோ, - புதுவேதா,
நிறைவழியின் மேவிய கோனே,நமோ நமோ!
முறைகள் தவறாத விணோனே,நமோ நமோ!
நிதிபெருகு மாரச தேனே!நமோ நமோ, - நெறிநீதா,
இறை தவிது பாடிய கீதா,நமோ நமோ!
பறைகள்பல கூடிய போதா,நமோ நமோ!
எருசலை யினீடிய நாதா,நமோ நமோ, - இறையோனே.