கீர்த்தனைகள்

பாடல் -16

16.விண்மணி, பொன்மணி

1 விண்மணி, பொன்மணி, வித்தக மணியே,
விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே,
சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, ,
சோதியாய் இங்கெழுந் தருள் சூடா மணியே! ,

2 பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே, ,
பாக்கியம் தருஞ்சீவ காருண்ய மணியே, ,
கண்மணி பொன்றினோர் கண்மணி யருளக்,
கண்டனர் உரைகேட்டக் கண்ணருள் மணியே! ,

3 மங்கை சீயோன்மகள் பூண்ட வானணியே, ,
மாசிலார் உளமதில் ஒளிரும் அம்மணியே, ,
நங்கைமரிகன்னி யீன்ற கண்மணியே, ,
நரர்சுரர் போற்றிடு நாயக மணியே! ,